மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்- செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு

by Editor / 27-08-2023 08:03:46pm
மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்- செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு

குருவாயூர் – புனலூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை - செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரை- குருவாயூர் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து இன்றும் குருவாயூரிலிருந்து நாளையும் தனது சேவையைத் தொடங்குகிறது. அதாவது, மதுரை - குருவாயூர் இடையே இயக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து இன்று பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது

அதேபோல், மறுமார்க்கமாக குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் குருவாயூரிலிருந்து நாளை அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, நாளை இரவு 7.50-மணிக்கு மதுரை சென்றடைய உள்ளது.
இந்த ரயிலானது, மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் மற்றும் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் தலைமையில் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை போர்த்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் கூறும் பொழுது மூன்று புதிய ரயில்கள் தற்பொழுது இந்த தடத்தில் இயக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல ரயில்கள் டிசம்பர் மாதத்திற்கு பின்பு இந்த வழியை இயக்கப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் மின் செங்கோட்டை புனலூர் இடையே அகல ரயில் பாதையில் பாதையில் மின்சார ரயில்  இயக்குவதற்கான மின்தடங்கள் அமைக்கும் பணிகள் பணிகள் நிறைவடைந்த பின்பு இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் பின்னர் அந்த ரயிலில் அவர் சாதாரண பெட்டியில் பயணிகளோடு கொல்லம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

 

மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்- செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு
 

Tags : மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

Share via