கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்.. CMக்கு அண்ணாமலை கண்டனம்

சிவகங்கை அருகே 5,000 பேர் வசித்துவந்த கிராமத்தில் அத்தியாவசிய தேவை மற்றும் கொலை, கொள்ளை பயம் காரணமாக கிராமம் மக்கள் அனைவரும் கிராமத்தை காலி செய்துள்ளனர். தற்போது ஒரு முதியவர் மட்டுமே அங்கு வசித்து வருகிறார். தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியே இதற்கு காரணம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 'தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ₹4,835 கோடி வழங்கியும், தமிழக அரசு பிரச்னையை தீர்க்கவில்லை' என கடிந்துள்ளார் அண்ணாமலை.
Tags :