குரூப்-1 தேர்வு 72 காலிப்பணியிடங்கள் 2.49 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, ஜுன் 15ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெறும் தேர்வின் மூலம், மாவட்ட துணை கலெக்டர் பதவிக்கு 28 பேர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு 7 பேர், வணிகவரி உதவி ஆணையர் 19 பேர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பதவிக்கு 7 பேர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 பேர், மற்றும் தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 பேர் என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், இன்று குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித்தேர்வு நடைபெற்றது.
வெறும்72 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். குரூப் - 1 மற்றும் குரூப்-1ஏ தேர்வினை எழுத ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மொத்தமாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் குரூப் 1 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 1ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி இன்று தேர்வு நடைபெறுகிறது.
Tags : குரூப்-1 தேர்வு 72 காலிப்பணியிடங்கள் 2.49 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.