கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் - பக்தர்கள் அச்சம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது. கடலில் குளித்துவிட்டு வரும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், அங்குள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கடல் மீன்வள அதிகாரிகள், "இந்த வகை ஜெல்லி மீன்களால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது" என கூறினர்.
Tags :