ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

by Staff / 04-01-2024 04:33:50pm
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

ஜப்பானில் கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இதனால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 8.16 மணியளவில் ஜப்பானின் ஹோன்ஷு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹோன்ஷு தீவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 40.9 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via