திமுக உச்ச நீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான பதில் மனு தாக்கல்!

by Editor / 05-05-2025 07:36:33am
திமுக உச்ச நீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான பதில் மனு தாக்கல்!

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. ஒன்றிய அரசின் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு திமுக பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் அடுத்த கட்ட விசாரணை இன்று நடக்க உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. வக்ஃப் திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் மே 5 ஆம் தேதி வரை நடைபெறக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

 

Tags : திமுக உச்ச நீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான பதில் மனு தாக்கல்!

Share via