பிறந்த சிசு, தாய் மரணம்.. பயிற்சி மருத்துவர்கள் காரணமா?

கரூர்: முத்தக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி யோகப் ப்ரியா (24) கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்றிருந்தார். கடந்த 2ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5ஆம் தேதி ஆப்ரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ப்ரியாவுக்கு இரத்த ஓட்டம் நிற்காததால் கர்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். தங்கள் மகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ததே காரணம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :