ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff / 01-02-2024 01:50:50pm
ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். ஒரு அமலாக்கத்துறை அதிகாரி, மாநில லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அங்கித் திவாரி மனுக்களை தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவை தள்ளுபடி செய்தது. அங்கித் திவாரிக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி வரையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2 வது முறையாக ஜாமின் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இந்த ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 5க்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Tags :

Share via