கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான டிபி ஆர் பிழைகள் காரணமாக மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
நெல்லையில் இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதுரையிலும் கோவையிலும் வரlஇருந்த மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக. கேள்வி எழுப்பியதற்கு, 2026 இல் கோவையில் மெட்ரோ ரயில் வரும் என்று கூறியதோடு கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான டிபி ஆர் பிழைகள் காரணமாக மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. 2017 மெட்ரோ ரயில் கொள்கையின் படி மெட்ரோ திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை தேவை .2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை குறைவாக இருப்பதின் காரணமாக நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .என்றும் 2025 ஆம் ஆண்டின் உத்தேச மக்கள் தொகையை குறிப்பிடவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியதோடு தற்போது பயணிகளின் எண்ணிக்கைக்கு பி ஆர் டி எஸ் போன்ற மாற்று போக்குவரத்து முறையே போதுமானது என்று தமிழக அரசின் சி.எம்.பி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்..
Tags :
















