மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் மெட்ரோ ரயில் நொறுங்கி  23 பேர் பலி

by Editor / 04-05-2021 04:37:11pm
மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் மெட்ரோ ரயில் நொறுங்கி  23 பேர் பலிமெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து மெட்ரோ ரயில் நொறுங்கியது.இதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மெக்சிகோவின்,ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 வது மெட்ரோ பாதையில் உள்ள மேம்பாலம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.
அப்போது அப்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலானது மேம்பாலதுடன் சேர்ந்து கீழே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது.
இதனைக் கேள்விப்பட்ட மீட்புப்படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் இந்த கோர விபத்தில் சிக்கி கார்களில் இருந்த 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த மெக்சிகோவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாசிலா இபாட்,மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றுக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo