படிக்க சொல்லி வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜினி. இவர் கட்டிடத்தொழில் செய்துவருகிறார்.
இவருடைய மகன் சக்திவேல் (வயது 18). பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். சக்திவேலுக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை. வேலைக்கு செல்லவே விரும்பியதாக கூறப்படுகிறது. பெற்றோர் அவரை கல்லூரிக்கு சென்று படிக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவன் சக்திவேல் தற்கொலை செய்துகொண்டார்.
Tags :