நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் வீரர்கள்

by Staff / 03-06-2023 02:17:30pm
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் வீரர்கள்

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'RRR'. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் விருது பெற்றது. இந்நிலையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. RRR படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.

 

Tags :

Share via