அதிமுகவிற்கு ரூ. 5 கோடி நன்கொடை வழங்கிய CSK
தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் யார் யார் எந்த கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர் என்ற விபரம் இடம் பெற்றுள்ளது. அதன்படி அதிமுகவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது 2019 ஏப்ரல் மாதம் 12 மற்றும் 15 என 2 நாட்களில் அதிமுகவின் வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ.6.05 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக உள்ளது. மொத்தம் 38 தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளது.
Tags :



















