by Staff /
11-07-2023
12:19:05pm
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில், அரசு பேருந்தை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால், பேருந்து சாலையோரம் இருந்த 30 அடி கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Tags :
Share via