மது வாங்கினால் உணவு மானியம் ரத்து..!! ரத்தன் டாட்டா

by Editor / 05-09-2021 12:37:44pm
மது வாங்கினால் உணவு மானியம் ரத்து..!! ரத்தன் டாட்டா

பொதுவாக சமூகவலைதளங்களில் பிரபாலங்கள் கூறியதாக போலி செய்திகள் வலம் வருவது வாடிக்கையான ஒன்று. பிறகு அவர்கள் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிப்பர்.

இதே போல இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாட்டா கூறியதாக ஒரு டெம்பிளேட்ட் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மது வாங்க ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மது வாங்குபவர்களின் உணவு மானியத்தை நிறுத்த வேண்டும் எனவும் ரத்தன் டாட்டா கூறியதாக அதில் இருந்தது. இந்த செய்தியை கண்ட சிலர் ரத்தன் டாட்டாவை வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில், தான் இப்படி கூறவில்லை என ரத்தன் டாட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இது போலி என்றும் தான் இது போன்ற கருத்துகளை எங்கும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via