பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது..

by Staff / 18-09-2022 05:37:04pm
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது..

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் இன்று சோதனையில் ஈடுபட்டது. தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்டபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via