ஆத்தூர் பள்ளிமாணவி தற்கொலை 3 பேர் கைது

by Editor / 06-03-2025 01:14:28pm
ஆத்தூர் பள்ளிமாணவி தற்கொலை 3 பேர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும் (சுபாஷ் 23) காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேசியதாகவும், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி தாய் வீட்டில் இருந்த பொழுது திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இளைஞர் (சுபாஷ்)அவரது தங்கை அந்த மாணவியிடம் தனது அண்ணனை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவ்வாறு செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர், அவரது தந்தை காத்தவராயன், இளைஞரின் தங்கை உட்பட மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்து இளைஞரின் தந்தை காத்தவராயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo