கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாரிகள் சோதனை
தமிழக வனத்துறையின் விஜிலென்ஸ் பிரிவு தலைமையகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விருதுநகர் மண்டல உதவி வன பாதுகாவலர்,வன பாதுகாப்பு படையினரின் தலைமையில் காரைக்குடி , திருப்பத்தூர் , சிவகங்கை வனச்சரக அதிகாரிகள் இணைந்து காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முனீஸ்வரன் கோவில் தெருவில் பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் 34 மான் கொம்புகள்,முள்ளம்பன்றியின் முள்ளால் செய்யப்பட்ட இரண்டு நகை பெட்டிகள் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட நகை பெட்டிகள் உட்பட பல்வேறு வகையான வன உயிரின பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்களை கைப்பற்றிசம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Officers raided a shop selling artifacts