சொத்துகளை கட்சிக்கு எழுதிவைப்பாரா? - சி.விஜயபாஸ்கருக்கு உதயகுமார் கேள்வி
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்குகளிலிருந்து தப்பிக்கவும், முதலீடுகளை காப்பாற்றி கொள்ளவும், சுயநலத்துக்காகவே அவர் வேறு கட்சியில் சேர முடிவெடுத்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், அதிமுகவுக்கு வந்த பிறகு சேர்த்த சொத்துகளை கட்சிக்கு சி.விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :



















