சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.முன்பதிவு தொடங்கியது.

by Editor / 17-10-2024 12:16:15am
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக  நடை திறக்கப்பட்டது.முன்பதிவு தொடங்கியது.

கேரளாமணிலாம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலை  ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு சாமியை தரிசனம் செய்ய  ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.தமிழ்மாதம்  மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 13-ம் தேதி நடை திறக்கப்பட்டது. பின்னர், புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட இருக்கின்றனர். வருகிற 21-ம் தேதி நடை சாத்தப்பட இருக்கிறது.

விரைவில், கார்த்திகை மாதம் பிறக்கவுள்ள நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் இருமுடி கட்டி தரிசனம் செய்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் இப்போது இருந்தே தொடங்கப்பட்டு தினமும் ஆன்லைன்மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பாட்டுள்ளது,அதற்கான முன்பதிவும்தொடங்கியுள்ளது.

 

Tags : சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காகநடை திறக்கப்பட்டது.முன்பதிவு தொடங்கியது.

Share via