பறவைக் காய்ச்சல் தடுக்க 45 குழுக்கள் அமைப்பு

by Staff / 29-10-2022 05:41:00pm
பறவைக் காய்ச்சல் தடுக்க 45 குழுக்கள் அமைப்பு

கேரள மாநிலத்தில் ஆலப்புழா மற்றும் கோட்டையர் பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி இருப்பதில் எதிரொலியாக தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் 45 பறவைக் காய்ச்சல் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு உதவி கால்நடை மருத்துவர் தலைமையில் அமைந்திருக்கும் இந்த ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகளை இவர்கள் சென்று பறவை காய்ச்சல் ஏறும் இப்ப பரவி இருக்கிறதா என சோதனை செய்தனர். மேலும்கோழிகளுக்கு ஏதாவது சோர்வு நோய் ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதோடு, அங்கு பராமரிப்பு செய்வது மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருந்து மற்றும் கிருமி நாசிகள் தெளிப்பது, கோழிகளை பத்திரமாக பாதுகாப்பதோடு கோழி பண்ணைகள் பணியாற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எல்லாம் இருக்கிறதா என்று இந்த குழுக்கள் ஒவ்வொரு பண்ணையாக சென்று முழுமையாக ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கும்.
 

 

Tags :

Share via