புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

by Staff / 27-11-2023 03:06:11pm
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்று பல்லடம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர், கரையான் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த யாசர் அராபத் (வயது 38), நித்திலால் (28), அசோக், விக்கி உள்பட 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories