புதிய அரசுக்கு நல்வாழ்த்துக்கள்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அமையவிருக்கும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மகளிர், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் புதிய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைநோக்குத் திட்டங்கள் தொடர்ந்தால் மட்டுமே மாநிலம் வளம் பெறும் எனவும், மக்களின் நன்மையை முன்னிறுத்தி புதிய அரசு செயல்பட வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :


















