உதயநிதியை வாழ்த்திய அமைச்சர் துரைமுருகன்

திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள உதயநிதி, செயலாளராக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி, என்மீது எப்போதும் அன்பு பாராட்டி வழிநடத்தும் கழகப் பொதுச்செயலாளர் மாமா துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துபெற்றேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :