தி.மு.கவின் தலைவராகப் பொறுப்பேற்று இன்றுடன் ஐந்தாவது ஆண்டை யொட்டி

by Admin / 28-08-2022 04:14:28pm
தி.மு.கவின்  தலைவராகப் பொறுப்பேற்று   இன்றுடன் ஐந்தாவது ஆண்டை யொட்டி

தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உடல்  நலக்குறைவு  ஏற்பட்டவுடன் கட்சியை நிர்வகிக்கவும் வழிநடத்தவும் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவிற்கு பின் கட்சியின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.தம் ஆற்றல் மிக்க தலைமையால் பத்தாண்டுக்குப் பின்பு  தி.மு.க.வை ஆட்சி  கட்டிலில்  அமைர்த்தினர்.  அவர்  தி.மு.கவின்  தலைவராகப் பொறுப்பேற்று   இன்றுடன் ஐந்தாவது ஆண்டை  யொட்டி கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு தம் தாயாரை கோபாலபுர இல்லத்திற்கு  சென்று  ஆசிபெற்றார்.  அவர்  தம் ட்விட்டர்  பதிவில்  இவ்வாறு பதிவிட்டுள்ளார் .தகைசால் தந்தையே! தன்னிகரற்ற  தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே!  தாங்கள்  வகித்த  தி.மு.க. தலைவர்  பொறுப்பில் நான்  அமர்ந்து  நான்கு  ஆண்டுகள் நிறைவடைந்து  ஐந்தாவது  ஆண்டில்  அடியெடுத்து  வைக்கிறேன் . ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த  படியில்  தான் ஏறுகிறேன் . உங்கள்  சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே  இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்!

 

Tags :

Share via