தென்காசி :கொலை வழக்கின்  குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

by Editor / 19-12-2023 10:30:25pm
தென்காசி :கொலை வழக்கின்  குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தர்மர் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சுலைமான், கலையரசன் மற்றும் அவரது அப்பா ராஜா ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை இன்று(19.12.23) விசாரணை செய்த நீதிபதி.திருமதி.அனுராதா  குற்றவாளிகளான ஆவுடையானூர் இந்திரா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சுலைமான்(26), ஆவுடை சிவன் பட்டி தெருவை சேர்ந்த கலையரசன்(24) மற்றும் அவரது அப்பா ராஜா(48) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் விதித்து தீர்ப்பளித்தார். திறம்பட செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Tags : கொலை வழக்கின்  குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

Share via

More stories