சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்

நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குனர் அன்பு இயக்கும் படம் 'படை தலைவன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. சண்முக பாண்டியனின் தந்தையும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு, "சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயார்". படக்குழுவினர் என்னை சிறப்பு தோற்றத்தில் நடிக்கவோ அல்லது பாடலுக்கு நடனமாடவோ என்னை அணுகலாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags :