ஜெயக்குமாரின் எலும்புகள் DNA சோதனைக்கு அனுப்பி வைப்பு

by Staff / 08-05-2024 12:09:22pm
ஜெயக்குமாரின் எலும்புகள் DNA சோதனைக்கு அனுப்பி வைப்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், உயிரிழந்தது ஜெயக்குமார் தானா? என அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், அவரது எலும்புகளை தற்போது டிஎன்ஏ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் தடய அறிவியல் அறிக்கை வர வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo