தூத்துக்குடிக்கு விமான சேவை அதிகரிப்பு பயணிகள் மகிழ்ச்சி.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. தினமும் சென்னை- தூத்துக்குடி இடையே 4 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 4 விமானங்களும் நாள் ஒன்றுக்கு 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமானங்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை காலங்கள் மற்றும் இதர விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து தென்மாவட்டங்க்ளுக்கு வருவதற்கு விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அதிக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 30ம் தேதியில் இருந்து, சென்னை- தூத்துக்குடி இடையே மேலும் 2 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 2 விமானங்களும், 4 விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல தூத்துக்குடி-பெங்களூரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படவுள்ளது. கூடுதல் விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்குகிறது. இதனால், இனிமேல் சென்னை- தூத்துக்குடி- சென்னை இடையே, ஒரு நாளில் 12 விமானங்கள் இயக்கப்படும். அதில் 6 விமானங்கள், சென்னை-தூத்துக்குடி இடையேயும், 6 விமானங்கள், தூத்துக்குடி- சென்னை இடையேயும் இயக்கப்படும். இதேபோல், சென்னை- திருச்சி- சென்னை விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.மேலும் 2026 சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவருவதால் ஏராளமான கட்சி தலைவர்களின் வருகையும் இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விமானங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதால் பயணிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் விமான நிலையத்தின் தரமும் உயர்த்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Tags : தூத்துக்குடிக்கு விமான சேவை அதிகரிப்பு பயணிகள் மகிழ்ச்சி.