வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அங்கு, நேற்று முன்தினம் (ஆக.9) பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த தங்கதமிழ்செல்வி (36), இந்திரா (58) உள்பட 15 பேர் சென்றனர். மலையில் இருந்து இறங்கியபோது, கோவில் இடையே செல்லும் மழை கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில், தங்கதமிழ்செல்வி, இந்திரா ஆகியோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்திராவில் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
Tags :