பள்ளியை மூடக்கூடாது - ஆட்சியரிடம் திரண்ட மக்கள்

by Staff / 29-04-2024 04:01:48pm
பள்ளியை மூடக்கூடாது - ஆட்சியரிடம் திரண்ட மக்கள்

திருநெல்வேலி நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை எனக் கூறி அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளியை திறக்கக்கோரி ஊர் பொதுமக்கள், மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo