விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 29-04-2024 03:55:18pm
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர், விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகவும், நான்கு இடங்களில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பயணிகளின் வாகனங்கள் மற்றும் உடைமைகளையும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo