கணவரின் சித்ரவதையால் மனைவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை (31) என்பவருக்கும், ரம்யா (30) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரம்யா, இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஏழுமலை, ரம்யாவை அடித்து துன்புறுத்தி தாய் வீட்டில் இருந்து நகை, பணத்தை வாங்கி வரும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரம்யா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ரம்யாவின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Tags :