அதிக கொழுப்பு சத்து பாலுக்கு விலை அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 05-10-2023 12:24:15pm
அதிக கொழுப்பு சத்து பாலுக்கு விலை அதிகரிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் இயங்கும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், பால் ஊற்றும் சில உறுப்பினர்களின் பால் மாதிரிகளை சோதனை செய்தபோது, அதில், 6 சதவீதத்துக்கும் மேல் கொழுப்பு சத்து இருப்பது தெரியவந்தது. அதிக கொழுப்பு சத்துள்ள பாலுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் வகையில், தரத்திற்கேற்ப பிரித்து, பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கப்பட்டு உள்ளது.இதன் வழியே, தரமான பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு லிட்டருக்கு ரூ. 1 முதல் 2 வரை அதிகபட்சம் கிடைக்கும். அதிக கொழுப்பு சத்து உள்ள பாலை வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு, அதிகபட்சமான தொகை கிடைக்கும். தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு, நிகர லாபத்தில் ஈவுத்தொகை வழங்கும் திட்டமும், நடப்பாண்டில் நடைமுறைக்கு வர உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo