சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ​மத்திய அரசு

by Editor / 02-07-2021 06:41:20pm
சேமிப்பு திட்டங்களின்  வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ​மத்திய அரசு

சேமிப்பு திட்டங்களின்

 வட்டி விகிதங்களில் மாற்றமில்லை:

 மத்திய அரசு

 

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-2022 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரம், பிபிஎப் உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.

ஆனால் அடுத்த 12 மணி நேரத்தில் வட்டி விகிதம் குறைப்பு முடிவை நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதி அமைச்சகம் திரும்பப் பெற்றது. இப்போது இரண்டாம் காலாண்டில் அதே வட்டி விகிதம் தொடரும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு: 4% வட்டி விகிதம்

ரெக்கரிங் டெபாசிட் (5 வருட தொடர் வைப்பு நிதி) – 5.8%

டைம் டெபாசிட் கணக்கு

1 வருடம் – 5.5%

2 வருடம் – 5.5%

3 வருடம் – 5.5%

5 வருடம் – 6.7%

மாதாந்திர வருவாய் திட்டம் – 6.6%

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – 7.4%

பிபிஎப் – 7.1%

செல்வ மகள் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) – 7.6%

தேசிய சேமிப்பு பத்திரம் – 6.8%

கிசான் விகாஸ் பத்ரா – 6.9%

 

Tags :

Share via