நீட் தேர்வு விலக்கு இளைஞர் அணி எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகன பேரணி
நீட் தேர்வு விலக்கு இளைஞர் அணி எழுச்சி மாநாடு விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகன பேரணி - கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த இருசக்கர வாகன இளைஞர் அணிக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி பொதுமக்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து பெறவும்
சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு மாநாட்டிற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை வரவேற்கும் விதமாக, திமுக இளைஞரணி சார்பில் கன்னியாகுமரியில் பிரமாண்ட இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
13 நாட்களில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 8,647 கி.மீ., தூரத்தை கடக்கும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து பேரணி நடைபெற்று வருகிறது..
இப் பிரச்சார இருசக்கர வாகனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்தையொட்டி பிரச்சார வாகனத்தை கோவில்பட்டி நகர கழக திமுக மற்றும் ஒன்றிய கழக திமுக சார்பில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags :