கோர விபத்து.. காவல் உதவி ஆய்வாளர்கள் பலி

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு நடந்த சாலை விபத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார். ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, டெங்கன் பைபாஸில் உள்ள தடுப்பு சுவரில் வேகமாக வந்த கார் மோதியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சுபம் மற்றும் சச்சின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :