பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அண்ணாமலையின் ஊர்வலத்திற்கு அப்பகுதியில் தடை விதித்து இருந்தனர். ஆம்பூரில் பிப்.02ம் தேதி தடையை மீறி அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு