86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை கலந்தாய்வு!

by Editor / 07-11-2023 08:34:35am
86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை கலந்தாய்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 MBBS இடங்களை நிரப்ப மத்திய  அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

 

Tags : 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை கலந்தாய்வு!

Share via