ராஷ்மிகா மந்தனாவை போன்று வெளியாகி உள்ள போலி வீடியோ.
நடிகை ராஸ்மிகா மந்தனாவின் வீடியோவை வைத்து போலியாக ஏ .ஐ .ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ பரபரப்பாக ரசிகர்களிடம் பேசப்பட்டு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வேறு ஒரு பெண்ணின் தோற்றத்தை வைத்து ராஸ்மிகாவின் முகத்தை அதில் பொருத்தி ஏ. ஐ.யால் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இது போன்ற செயல் மிகப்பெரிய குற்றத்தை விளைவிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகர் அமிதாப்பச்சனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . .அறிவியல் தொழில்நுட்பம் அதன் நன்மைகள் விளைவிக்கும் நேரத்தில் இது போன்ற செயல்பாடுகள் சமூகத்தை பாதிப்படையச் செய்யும். எச்சரிக்கையாக, இந்த தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். இதற்கு சட்டபூர்வமான ஒரு முன்னெடுப்பு தேவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்...
ராஷ்மிகா மந்தனாஇதுபோன்ற செயல் தன்னை மிகவும் பாதிப்படைய வைத்திருப்பதாகவும் சமூக வலைதள பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார்
ராஷ்மிகா மந்தனாவை போன்று வெளியாகி உள்ள இந்த போலி வீடியோ சாராபடேல் என்கிற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனில் வாழும் பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி வெளியிட்ட வீடியோவை அப்படியே வந்தனாவின் முகத்தை மாற்றி வைத்து வடிவமைத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :