57 வயது நபருக்கு ரூ.4.29 கோடி லாட்டரி பரிசு

அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தைச் சேர்ந்த 57 வயது நபருக்கு, சுமார் ரூ.4.29 கோடி லாட்டரி பரிசு அடித்துள்ளது. இதனால், குஷியான அவர், இந்த பணத்தை தனது குடும்பத்திற்காக செலவு செய்ய இருப்பதாகவும், மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, வேறொரு லாட்டரியை வாங்க சென்ற நிலையில், அதன் விற்பனை முடிந்ததன் காரணமாக, ‘Detroit Tigers’ என்ற லாட்டரியை வாங்கியுள்ளார். அதில் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
Tags :