வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி.. ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

தனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி எனது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான் உட்காரும் இடத்திற்கு அருகே அந்த கருவியை கண்டுபிடித்தோம். யார்? எதற்காக அந்த கருவியை வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்து சொல்கிறேன் என கூறினார். ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், அடுத்தடுத்து சலசலப்பு அதிகரித்து வருகிறது.
Tags :