அண்ணா பிறந்தநாள்முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை-வாக்குறுதி எடுத்த திமுகவினர்.

by Staff / 15-09-2025 10:06:22am
அண்ணா பிறந்தநாள்முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை-வாக்குறுதி எடுத்த திமுகவினர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் 117வது பிறந்தநாள் இன்று (செப் 15) சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் அண்ணாசிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெய்ததோடு அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மரியாதை செய்தனர். இத்துடன் திமுகவினர் * தமிழ்நாடு அரசின் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்
* தொகுதி வரையறைக்கு எதிராக போராடுவேன்
* தமிழ்நாட்டை தலைகுனியை விடமாட்டேன்
* வாக்காளர் பட்டியல் மோசடி, SIR நடவடிக்கைக்கு எதிராக இருப்பேன்
* நீட் உட்பட இளைஞர்க்குக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து நிற்பேன்
* மாணவர்களுக்கான கல்வி நிதிக்காக போராடுவேன் 
* தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்து போராடுவேன் உட்பட பல்வேறு வாக்குறுதியை திமுகவினர் எடுத்துக்கொண்டனர்.

 

Tags : அண்ணா பிறந்தநாள்முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை-வாக்குறுதி எடுத்த திமுகவினர்.

Share via

More stories