9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்மழைக்கு வாய்ப்பு

by Editor / 16-08-2023 11:03:26am
 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில், வரும், 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கிமீ, வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன்மழை

Share via