"கமல்ஹாசன் ஜூலையில் எம்பியாக பதவியேற்பு"

by Editor / 14-04-2025 04:27:28pm

ராஜ்யசபா எம்.பி. ஆக ஜூலை மாதம் கமல்ஹாசன் பதவியேற்பார் என்று மநீம துணை தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கவேல், "கமல்ஹாசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்குவது என மநீம நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பியதும் ஜூலை மாதம் ராஜ்யசபா எம்.பி. ஆக கமல்ஹாசன் பதவியேற்பார்" என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via