"இபிஎஸ் உடன் இணைய முடியாது"டிடிவி தினகரன்

by Staff / 12-06-2024 12:46:18pm

எடப்பாடி பழனிசாமி உடன் இணைய முடியாது என அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "சுயநலவாதிகள், பணத்திமிரு பிடித்தவர்களின் கைகளில் அதிமுக போய்விட கூடாது என்பதற்காகதான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுக திமுகவின் பி டீமாக செயல்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முதல் தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி கண்டுள்ளது. அவர்களுடன் இணைவது சாத்தியமே இல்லை" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via