திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்தது .

திருச்சிமணப்பாறை அருகே துறையூர் பாலாஜி நகரில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் பாலாஜி என்பவர் இன்று காலை துறையூரில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு சொகுசுக்காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரியம்பட்டி பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் மின் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனையடுதது, காரில் பயணம் செய்த அனைவரும் உடனடியாக காரை விட்டு இறங்கி, அருகிலுள்ள துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அனைத்தனர்,தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags : திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்தது .