மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23,300கன அடியாக குறைப்பு.

by Staff / 07-09-2025 08:26:15am
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23,300கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5ந்தேதி உபரி நீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது.இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,300 கன அடியாக சரிந்த காரணத்தால் மேட்டூர் அணை உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22500கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.

 

Tags : மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23,300கன அடியாக குறைப்பு.

Share via