ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

by Editor / 02-06-2022 11:13:42pm
ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

சென்னையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.21 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறும், நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்காக ஆளுநரை நேரில் சந்தித்து  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : Tamil Nadu First Minister MK Stalin met Governor RN Ravi

Share via