நாட்டில் 8 புதிய நகரங்கள்.. மத்திய அரசு தீவிரம்
நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறையின் ஜி20 பிரிவின் இயக்குநர் எம்பி சிங் கூறுகையில், நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு யோசித்து வருகிறது. நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகை சுமையை குறைக்கும் வகையில் இந்த திட்டம் தற்போது பரிசீலிக்கப்படுகிறது என்றார். நிதி ஆயோக் பரிந்துரைக்குப் பிறகு 26 புதிய நகரங்களுக்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு மாநிலங்கள் அனுப்பியுள்ளன. மேலும் 8 புதிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த முக்கிய நகரங்கள் தொழில், வர்த்தகம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும்.
Tags :